அனைத்தும் அனைவருக்குமாய்
அனைவரையும் மடி தாங்கும் பூமி
அனைவருக்கும் மார் ஊட்டும் இயற்கை
அனைவரையும் சீர்ராட்டும் மழை
அனைவருக்கும் ஒளிகொடுக்கும் சூரியன்
அனைவருக்கும் சுவாசம்மளிக்கும் காற்று
என
அனைத்தும் அனைவருக்கும்
பொதுவாய்
பொதுவான ஒற்றுமையில்
கருத்தரித்து உயிர்வாழும்
நீ
வேற்றுமையில் விடியல்
தேடுவது ஏன்?