அவள் நினைவுகள்

மேகத்தை பிரிந்து
என் தேகம் சிந்திய
அந்த மழைத்துளி ,

இரவின் இனிமை ரசித்தபடியே
என் செவிகள் சுமக்கும்
அந்த அழகிய இசை ,

மணம் சிந்தும் மலரோடு சேர்த்து
என்னையும் உரசி சென்ற
அந்த தென்றல் ,

துன்பம் மறந்து
எனது பார்வை தொலைத்து
கனவுகள் தேடும் அந்த நித்திரை ,

இவையனைத்தையும் நேசிக்கிறேன்
காதலென்னும் சிறு கல் இடறி
என்னுள் விழுந்த தேவதை உன்னை
இவை நினைவூட்டும் போதெல்லாம் !!!!!!!


நினைவுகளுடன் ,
சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (6-Feb-13, 2:21 pm)
Tanglish : aval ninaivukal
பார்வை : 227

மேலே