தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !
தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !
ஒழிக்காமல் வளர்த்தது
தீவிரவாதம்
தூக்குத்தண்டனை
கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை
கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
தூக்குத்தண்டனை
வல்லரசின் ஆசைக்கு
இணங்கி
தூக்குத்தண்டனை
இரகசியத்தை அழிக்க
விரைவாக நிறைவேற்றம்
தூக்குத்தண்டனை!
ஒழித்து விட்டன
வளர்ந்த நாடுகள்
தூக்குத்தண்டனை !
விரும்புவதில்லை
மனிதாபிமானிகள்
தூக்குத்தண்டனை !
மனிதாபிமானமற்ற
மடச்செயல்
தூக்குத்தண்டனை !
நடைமுறையுள்ள நாட்டில்
பெருகியது வன்முறை
தூக்குத்தண்டனை !
பகுத்தறிவைப் பயன்படுத்தினால்
நீக்கிடலாம்
தூக்குத்தண்டனை !
அரசியல் லாபம்
அடைந்திட வழங்குவது
தூக்குத்தண்டனை !
.பழிக்குப்பழி வாங்கும்
விலங்கு குணம்
தூக்குத்தண்டனை !
நாகரீக உலகில்
நாகரீகமற்ற செயல்
தூக்குத்தண்டனை !
அடுத்தவருக்கு என்றால் வேடிக்கை
தனக்கு என்றால் வேதனை
தூக்குத்தண்டனை !
நிரபரதிக்கும் வழங்கிய
வரலாறு உண்டு
தூக்குத்தண்டனை !
வாருங்கள் மனிதர்களே
தூக்கிலிடுவோம்
தூக்குத்தண்டனை !
--