என்ன தெரியும் இந்து முன்னணிக்கு
அவர்களுக்கு என்ன தெரியும் -பாவம்?
அவர்கள் தலைவன்
அவளை கண்ணோடு கண் நோக்கலாம்
அவள் தந்தையும் ,அவன் தந்தையும்
உறவு ஆகலாம்
அத்தினம் பண்டிகை ஆகலாம்
அதையே நான் செய்தால் குற்றமா?
அவர்களுக்கு என்ன தெரியும்?
அவள் முகம் காண
மூடாத என் இமை பற்றி
அவர்களுக்கு என்ன தெரியும்?
அவள் வருகை அறிவிக்கும்
கொலுசுஒலி கேட்க
அன்றாடம் தவம் இருக்கும் என் செவி பற்றி
அவர்களுக்கு என்ன தெரியும்?
அறுசுவை மட்டுமே உண்டு என்பார்
அவள் சொற்சுவை உண்டே- யான்
வளர்த்த என் தேகம் பற்றி
அவர்களுக்கு என்ன தெரியும்?
அவளது கூந்தல் ஏறியே
மல்லியும் ரோஜாவும்
பெற்ற கூடுதல் மணம் பற்றி
அவர்களுக்கு என்ன தெரியும்?
அவளது வினாடி பார்வையிலே
கோடி ஆண்டுகள்
விண்ணிலும் ,மண்ணிலும்
வாழும் எங்கள் அறிவியல் தந்திரம் பற்றி
அவர்களுக்கு என்ன தெரியும்?
காற்றும்,எங்கள் தலைவனும் ஓன்று
எங்கள் தலைவன் இன்றி
அவர்களும் ,எவர்களும்
இங்கு வாழமுடியாது- என்று
அவர்களுக்கு என்ன தெரியும் -பாவம்?