நனையுது இமைகளும்

வயதாகி போனாலும்
வயிறு நிறைந்திடவே
வழியெனக் கொண்டு
வண்ண குடங்களை
விற்றிடும் மூதாட்டி !

ஏக்கமிகு பார்வையே
பக்கங்களாய் கூறிடும்
அவர்தம் நிலைதனை
அன்றாட வேதனையை
சுமந்திடும் சுமைகளை !

வாடுது நெஞ்சமும்
பாடுது சோகமுடன்
தேடுது வழியினை
நாடுது தனிமையை
நனையுது இமைகளும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Feb-13, 4:06 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 91

மேலே