உயிரற்ற உயிரினம் வறுமை
வறுமை,
உயிரினங்களை அழித்து,
அழியா உயிரினங்களாய்,
வாழ்ந்து கொண்டிருக்கும் வம்சாவழி....
ஆறறிவு பெற்ற மனிதனையும்,
அசாத்தியமாக வீழ்த்த இயலா
அச்சுறுத்தும் விலங்குகளையும்,
அடி சுவடு இல்லாமல் அழிக்க
இறைவன் வடிவித்த ஆயுதம்...
ஆயுதமது கூர்மையினால்,
ஆருயிர் மனிதனின்
அறிவு கூர்மையையும்
அழித்து நிற்கும் அசுரன் அது....
கண்களுக்கு காணாததாய்,
காற்றாய் கூட அடைக்க முடியாததாய்,
இப்புவியில் பரவி,
அதன் இயக்கத்தை இறுக்கி நிற்கும்
உயிரற்ற உயிரினம்...