சமுதாயம்

சித்தமெங்கும்
சீர்கெட்ட சிந்தனை
பூரணமும்
அதில் வியாபிக்க
மனிதப் போர்வைக்குள்
முற்றும்
தன்னையே மறைத்தபடி
மண்ணுலக ஜீவன்கள்..!

இன்னல்
இன்னாத வாழ்க்கை
கண்ணுற்றே
இயலாத நெஞ்சம்
சுற்றும் எண்ணி
சுழன்ற எண்ணங்களை
சிறைப்படுத்தியபடியே
தொடரும் பயணங்கள்..!

தேடல்
நீளும் தொலை தூரங்கள்
தொலைந்தே போன
மானிட உன்னதங்கள்
மூர்ச்சித்து போன
மூளைக்குள்
அசைபோட்டு தேம்பும்
விடியாத விடியல்கள்..!

ஐம் புலன்கள்
அடக்கியாளா உணர்ச்சிகள்
நெறியற்று தடம் மாற
கரைந்த கனவுகள்
உண்டான கன்னத்தின் ஈரங்கள்
கரை சேரா வாழ்வின்
கதை சொல்லியபடியே ஏங்கும்
காலத்தின் எச்சங்கள்..!

கட்டுப்பாடுகள்
களைந்தே கழிவான
எச்சில் பிண்டங்கள்
ஈனங்களாய்
இயந்திரங்களாய்
உல்லாசமாய் உருக்குலைக்க
முடங்கி மடிந்தபடியே
முனகும் சமுதாயம்..!

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (17-Feb-13, 9:38 am)
பார்வை : 319

மேலே