தளத்தில் ஒரு ஆய்வு கண்ணோட்டம்
புள்ளிகளால் கொந்தளிக்கும்
வெள்ளை உள்ளங்களுக்காக
இந்த ஆய்வுக் கண்ணோட்டம்
தேவை எனப் பட்டது எனக்கு!
தளத்தில் படைப்புகளின் வகைகள்
பகுக்கப் பட்டுள்ளன பலவிதங்களில்
அவற்றினை பட்டியலிட்டு பார்த்தால்
என் வசதிக்கான வரிசைப் படுத்துதலில்
சஞ்சுவின் கவிதைகள், தமிழ் கவிஞர்கள்
இவை இரண்டையும் விடுத்து நோக்கின்
பிற அனைத்துமே தோழர் கவிதை
எனும் கடலில் கடக்கும் ஆறுகளாக
வடிவமைக்கப்பட்ட
கவிதை பிரிவுகளாகவே
தெரிகின்றன
அந்த பிரிவுகளையும் என் வசதிக்காக
வரிசைப் படுத்திப் பார்த்தால்
அதன் பிரிவுகள்
புதுக் கவிதை, எனும் பிரிவின்
பகுதிகளாக செல்லும் சிலகிளைகள்
மேலும் ஆழ நோக்கினால்
ஹைக்கூ கவிதை, கைப்பேசி கவிதை
பிரிவுகள் அங்கே தெரிகின்றன
மற்ற பிற கவிதைகள் எனில் அவை
நண்பர்கள் கவிதை, வாழ்க்கை கவிதை
என்பவையோடு
காதல் கவிதை, காதல் தோல்வி கவிதைகள்
எழுத்து
எனும் பிரிவுகள் தெரிகின்றன.
இவை தவிர பிற (others) எனும் பிரிவும்
அங்கே உள்ளது.
இவ்வாறு தோன்றும் பிரிவுகளில்
கவிதைகள் மட்டுமே அடக்கம்.
இவை தவிர தளத்தில்
கதைப் பகுதியில்,
கட்டுரை, சிறுகதை, பாட்டி சொன்ன கதைகள்,
எனும் பிரிவுகளும்,
சற்றே அருகில் நகைச்சுவை, படித்ததில் பிடித்தது,
கருத்துக் கணிப்பு, கேள்வி-பதில்,
என்ற பகுதிகளையும் கண்டு ரசிக்கலாம்
இவற்றிற்கான வருகை எண்ணிக்கையில்
குறைவில் இருந்து அதிகம் எனும்போது
கருத்துக் கணிப்பு, கேள்வி-பதில், பாட்டி சொன்ன கதைகள்,
நகைச்சுவை, கட்டுரை, சிறுகதைகள்
எனும் போக்கிலேயே இவற்றை காணலாம்
அதிக நடமாட்டம் உள்ள பகுதி என்பது கவிதைப் பகுதியே.
சரி இனி கவிதைப் பகுதிக்கு வருவோம்
கவிதைப் பிரிவில் வரும்
ஒவ்வொரு பகுதியின் பதிவேற்றமும்
புதியவை,, அதிகம் பார்த்தவை, தேர்வு செய்யப்பட்டவை
என்ற வகையில் வரிசைப்படுத்தப்பட்டு
பட்டியலாக பார்வைக்கு வருகின்றன.
இவை அனைத்தும் பொதுவாக
கூடும் இடமாக புதுக்கவிதை எனும்
சங்கமம் செயல்பட்டு, அனைத்துப் பிரிவிலும்
அதிகம் பார்த்தவை, தேர்வு செய்யப்பட்டவை
எனும் அடிப்படையில்
முன்னணியில் நிற்கும் படைப்புகள்,
முதல் பக்கத்தில்
வரிசைப் படுத்தப்பட்டு பார்வைக்கு வந்து
வரவேற்கின்றன.
புள்ளிகளின் அடிப்படையில்
பார்த்தவை, தேர்வு செய்யப்பட்டவை
வரிசைப் படுத்தப் படுகின்றன.
இது ஒரு இயந்திரத் தனமான செயல்பாடு
தளத்தின் நிர்வாக வசதிக்கான ஒன்று
படைப்பாளி எந்த பிரிவில் படைப்பை
பதிவேற்றுகிறார் என்பதற்கும் இதற்கும்
சற்றே தொடர்பு இருப்பினும்.
படைப்பாளி, புள்ளிகளை பெறும்
நேரடி இழைப்பில் (influencing the voter)
ஈடுபட முடியாது என்பதன் புரிதல் வேண்டும்
காதல் கவிதையை ஹைக்கூப் பகுதியில்
பதிவேற்றி, அது
பார்வையும் தேர்வும் அதிக பெற்று இருப்பின்
அந்த வரிசை
ஹைக்கூப் பகுதிக்கே செல்லும் என்பதும் உறுதி.
உதாரணம் கண்ணீரிலும் ஒரு முயற்சி (மௌன இசை prasanya)
இது ஒரு ஹைக்கூ கவிதையே இல்லை.
ஆயினும் அந்த பிரிவில் அவர் பதிவேற்றி,
அது அதிக பார்வையும், தேர்வும் பெற்று முதலிடம் வகிப்பது
ஹைக்கூ கவிதை பிரிவில்.
இந்த படைப்பின் கருத்து என்னவோ காதல் தோல்விதானே.?
அது காதல்தோல்வி கவிதைப் பிரிவுக்கு
படைப்பாளியால் மாற்றப்படாத வரை
ஹைக்கூகவிதைப் பிரிவில் வரும்
பட்டியலில் இடம் பெற்றேதான் இருக்கும்
சரி இனி ஒரு பிரிவில் 16-2-2013 ன் படி
முதல் இடத்தை பிடிக்கும் படைப்பை தேடலாம்.
உதாரணத்திற்கு மட்டுமே!
கைப்பேசி கவிதைகள்
அதிக தேர்வு = தயவு செய்து போன் எடு (கவிஞர் இனியவன்)
அதிக பார்வை = அன்பாக கைப்பேசி எடு (கவிஞர் இனியவன்)
இவை இரண்டுமே
கைப்பேசி கவிதை
எனும் இலக்கணத்திற்கு உட்பட்டவையா
எனும் கேள்வியை எழுப்பி
அவைகளை படித்து பாருங்களேன்!
வரும் விடையில் சற்றே ஏமாற்றம் வரலாம்.
கைப்பேசி கவிதை (sms poem)
என்பதே இதன் பெயர் எனும்போது
அதில் சில உதாரண கவிதை பார்க்கலாமா?
என் முதல் கவிதை நீ
“அம்மா” !
மூன்றெழுத்து கவிதை
“அம்மா”
ஓழுத்தில் கவிதை
எதிரில் அம்மா “நீ”
எனவே நடைமுறை யதார்த்தம் என்பது
படைப்பாளி அந்த பிரிவில் பதிவேற்றியுள்ளார்
மற்றும் அந்த பிரிவில் அவை முதலிடம் பெற்று
பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. அவ்வளவே !
இதில் இலக்கணமோ, வரைமுறையோ எங்குமே
கட்டுப்பாடு எனும் செயல்பாட்டில் இல்லை.
எனவே கொந்தளிப்பு தேவையில்லை.
யாருக்கும் இங்கு வகுப்பு எடுக்க முடியாது !
எனவே உணர்ச்சி கொந்தளிப்பில் குரல் எழுப்பி
எவரும் தமது உடல் ஆரோக்கியத்திற்கோ
தளத்தில் வரும், அழகிய நட்புறவுக்கோ
களங்கம் விளைவித்து,
தேடிப் பிடித்த உறவு நட்புகளை
விலக்கி வைக்கும் முயற்சியிலோ
நட்புறவில் இருந்து விலகும் முயற்சியிலோ
ஈடுபட்டு
மனதை ரணமாக்கி கொள்ள வேண்டாம்
என்பதே இந்த ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் வந்த
இந்த படைப்பின் நோக்கம்
மேலும்
எந்த படைப்பாளியையும்
புள்ளிகளின் அடிப்படையில் எடைபோட்டு
நெருங்கவோ, விலக்கவோ முயற்சித்து
எவரையும் காயப்படுத்தவோ
சுயம் காயப்படவோ வேண்டாம் என்பதே
இந்த படைப்பின் வேண்டுகோள்!