இன்னும் மாறவில்லை !?

கற்பழிப்பு குற்றவாளிக்கு 5 வெடக் கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதித்த கட்ட பஞ்சாயத்தார்!
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதா? மரண தண்டனை அளிப்பதா? ஆண்மை நீக்கம் செய்வதா? என்று நாடு முழுவதும் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ரஞ்சியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தாரிடம், குடி போதையில் இருந்த ஒரு ஆசாமி தன்னை கற்பழித்து விட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவனை அழைத்து விசாரித்த பஞ்சாயத்தார், குற்றவாளிக்கு ஒரு ஆட்டுக்கிடாவை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தனர்.
இதேபோல், அம்மாநிலத்தின் சக்ரதார்பூர் பகுதியில் ஒரு கற்பழிப்பு குற்றவாளிக்கு 5 வெடக் கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.