என் தலைவனுக்கோர் அஞ்சலி

பிரபாகன் எனும் மாவீரனின் தாள்களுக்கும் அவன் காட்டிய வழியில் பயணிக்கும் நெஞ்சங்களுக்கும் இது சமர்ப்பணம்

அன்புநெஞ்சம் கொண்டுவந்து அரசாண்மை கொண்டவன்!
தன்குடும்பம் தன்சுற்றம் தலைசுற்றல் கொள்ளாமல்
தமிழர்குலம் தமிழ்வாழ்வை தன்மூச்சாய் கொண்டவன்
மனிதர்குல உணர்வுக்கு மறுமலர்ச்சி தந்தவன்

தூதுவிட்டு பேசிபார்த்த தூயஉள்ளம் கொண்டவன்
கோரிக்கைகள் பலவற்றை கோப்புகளில் செய்தவன்
தரணியாளும் நோக்கமில்லை எம்உரிமைவேட்கை என்றவன்!
மூச்சுகாற்று மூலம்பேசி எம்சிந்தையில் அமர்ந்தவன்!

போராளி எனும்சொல்லில் முதன்மையாக வருபவன்!
கட்சிஎனும் கயமைகொண்டு கறைபடிந்து நின்றிடாமல்
தேசம்எனும் நேசம்கொண்டு பேசவைத்து வாழ்ந்தவன்
மக்கள்மனம் அறிந்தபின்பே செயல்படவும் துணிந்தவன்!

தமிழரின் வாழ்வுரிமை தவிர்க்கவொணாப் போராட்டம்
தரணிக்கே சொன்னவன் தலைநிமிர்த்தி வாழ்ந்தவன்!
மௌனம்காத்து அறிவுசார்ந்து மகுடம்சூட்டி நின்றவன்
நாடுவிட்டு கண்டம்விட்டு நேசம்பல கொண்டவன்

போரிட்ட எதிரிகளால் பேரிடிஎனப் பட்டவன்
மன்றாடும் எதிரிகளை மன்னித்தே விட்டவன்!
பழிசுமந்தே பகைமைதீர பசுமைஉள்ளம் கொண்டவன்
நோகடித்த நெஞ்சங்களும் வாகைசூட நின்றவன்!

சாடிநின்ற அனைவருமே கூடிநின்ற போதிலும்
சாவுவரும் என்றபோதும் சாதிக்கவே பிறந்தவன்!
தள்ளிநின்று எள்ளிநகை யாடிநின்ற மாந்தரும்
புள்ளியாக போகும்படி போற்றிகளை கொண்டவன்!

கயமைகொண்ட சூழ்ச்சியாலே காலனுக்குப் பணிந்தவன்
காத்தமௌனம் தமிழர்நல வாழ்வுரிமைக் கென்றவன்

எழுதியவர் : மங்காத்தா (19-Feb-13, 3:40 pm)
பார்வை : 159

மேலே