நண்பன்

ஆயிரம் உறவுகளை
ஒன்றாக்கி வந்தவன் நீ!
உறவுகள் எல்லாம்
உதறி தள்ளிய பின்
உறுதுணையாய் நின்றவன் நீ !

பாவி மனம் பாவை பின்னே
பாழாய் போன பின்னும்
பரிதவித்து போனவன் நீ!
பார் முழுவதும் பார்த்து சென்றாலும்
பக்கபலமாய் நின்றவன் நீ!
பசியோடு நீயிருந்தும்
பகுதி உணவு பார்த்தெடுத்து வைத்தவன் நீ!
மாலை நேர மயக்கத்தில்
மதுவோடு உண்ட உணவு
வாய்வழி வந்தாலும்
வலித்தெடுத்தவன் நீ!

கர்ணனாய் நீயிருந்தும் -நீ
அன்பு தந்த வள்ளல் -ஆகையால்
பாரியும் சேர்ந்த ஒருவன் நீ!

என்
தாயையும் பின் தள்ளி
முன் சென்றவன் நீ!

எதிர் காலம் முன் நின்றாலும்
வரலாறு பின் சென்றாலும்
உண்மை அன்பை உன்னிடமே கண்டேன்!

எழுதியவர் : தவமணி (20-Feb-13, 12:29 am)
Tanglish : nanban
பார்வை : 1254

மேலே