அப்பா

மூன்றாம் வகுப்பில்
முதுகு சுமந்த
புத்தகங்கள்
பாரமென
என்னையும்
சேர்த்து
நீ சுமந்தாய்

இரவல் வாங்க
கூடாதென்று
எனகுறைத்து
இஷ்டமின்றி
வாங்கி கொண்டாய்
வட்டியுடன்

ஆங்கில மோகம்
அனைவரிடம்
தொற்றிக்கொள்ள
அத்துணை பணத்தையும்
கொட்டிவிட்டாய்
பள்ளி கட்டணத்திற்காக

ப்ளுடி கம்னாட்டி என்று
ஆங்கிலத்தில் நான் பேச
எம்மவன்
எவ்வளவு அழகாய்
பேசுகிறானென்று
நீ சிரித்தாய்
வெகுளியாய்

முதல் வகுப்பு
பயண சீட்டு
எனக்களித்து
முழுநேர
பயணமாய்
நீ நடப்பாய்

காரைபல்
கிழிந்த சட்டை
கால் தெரிய
கட்டிவந்த
கையிலியுடன்
நீ
நின்றாய்
கல்லூரி ஆண்டுவிழாவில்

என்னப்பா
என்றேன்
எரிச்சலுடன்

எனது
கையில்
திணித்தாய்
ஒரு பையை

கருப்பு நிற கோர்ட்
எனக்களித்து
காலனி இல்லாமல்
நீ
நடந்தாய்

எழுதியவர் : திருக்குமரன்.வே (20-Feb-13, 4:33 pm)
Tanglish : appa
பார்வை : 169

மேலே