ஏய் பெண்ணே
அச்சம் மடம் நாணம் வேண்டாம்
புதிய காலப் பெண்ணே
நீ அச்சப்பட்டு முடங்க வேண்டாம்
எழுந்து வா பெண்ணே
உச்சி முதல் உள்ளங்கால் வரை
உனது ஆயுதம் பெண்ணே
உன்னை தொட்டு விட முயன்றவனை
எட்டி உதைப் பெண்ணே
வானம் கூட எல்லை இல்லை
அதையும் கடந்து விடு கண்ணே
காலங்கள் உனதாக கனவுகள் மெய்யாக
களத்தினில் போராடு
வெற்றி உனதாகட்டும் பெண்ணே
அன்று நிலவு என்று வர்ணித்தோம்
இன்று நிலவையே ஆராய்கிறாய்
இன்று இதைக் கண்டு வியக்கிறோம்
இன்னும் காண துடிக்கிறோம்
பாரதியின் காலத்தில்
அடுக்களை மட்டும் உன் அறை
பாரதியின் பெண்ணே
இன்று பலே உன் திறமை
ஆடவன் நான் அவா கொண்டு ஒன்று கேட்கிறேன்
முக பூச்சின் விளம்பரத்தில்
மட்டும் மாதிரியாய் நிற்காதே
கருமையும் அழகு என்று கருத்தாய் நில்
ஏய் பெண்ணே
அச்சம் மடம் நாணம் வேண்டாம்
நீ அச்சப்பட்டு முடங்க வேண்டாம்