அரசக்கனவு ......
நீயே ஏற்றுக்கொண்டபின்
நிலைக்கண்ணாடி
ஏதுக்கடி,
சிருங்காரித்து,
மாவு அப்பி,
மதன மணம் பூசி,
மத யானை
முறுக்குடன்,
தினவெடு தோள் திருத்தி
திமிராய் நடை நடத்தி
தெருவெல்லாம்
திரும்பி பார்க்கவேணும்
ஆடை சீய்க்க
அயர்ச்சியிலாது காட்ட.
அடிக்கொருத்தரம்
புதுப்பார்வை ஏனடி
இனி.....?
நீயே ஏற்றுக்கொண்டபின்
நிலைக்கண்ணாடி
ஏதுக்கடி,