ஏனடா என் வாழ்வினில்..............

ஏனடா என் வாழ்வினில் வந்தாய்
நித்தமும் என்னை உயிரோடு வதைக்கவா
பிளந்து இருக்கின்ற தரிசு நிலமாய் தான் இருந்தேன்
நீ காதல் என்னும் அன்பு மழை பொழியும் வரை!
என் வாழ்வினில் நீ வந்தது
என் வரமா இல்லை சாபமா?
வரமெனில் ஏன் பிரிந்தாய்?
சபமெனில் இதன் விமோசனம் தான் என்ன?
என் வாழ்வினில்
உன் நினைவுகள் மட்டுமே வளர்பிறை
மற்றது எல்லாம் தேய்பிறை - இதற்கு
முடிவு தான் என்ன என்று இன்றும்
தெளிவில்லாமல் அலைகின்றேன்
எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு நாள் முட்டாள்கள் தினம்
எனக்கோ உனக்காய் காத்திருக்கும்
நாட்கள் எல்லாமே முட்டாள் தினம் தான்
இதை தெரிந்தும் முட்டாளாய்
இருக்கவே நினைக்கின்றேன்
புரியாத புதிராய் நான்
புதிரை விடுவிக்க மனமும் இல்லை
உன் நினைவில் இருந்து விடுபட
விருப்பமும் இல்லை!

எழுதியவர் : (27-Feb-13, 10:26 pm)
Tanglish : aenada en valvinil
பார்வை : 209

மேலே