தாரை வார்ப்பது
பிறந்த போதே பெண்ணை
பேசிய காலங்கள் எல்லாம்
மறந்து போகத்தானே மகளை
தாரை வார்ப்பது !
மக்களை பெற்ற
மகராசியே ,மனித குலத்துக்கு
நீ என்றும் ஆசியே !
இப்படி போற்றும் ஆணினமே
இக்கலியுகத்தில் பெண் உலகம்
எப்படி இருக்கு ? ஏன் இந்த
சீரழிப்பு ? எதற்கு இந்த இறுமாப்பு ?