கடன் = சரி + தவறா ?

இல்லாததால்
இல்லாததை
இல்லாளிடமோ - அன்றி
பிற ஆளிடமோ
வாதம் தொடுத்து - உத்திர
வாதம் கொடுத்து
பெறுவது கடன் !

காந்திகள் வாடகைக்கு
வரும்போது - தம்முள்
சிலரை பிணையாக்கி
கொண்டு செல்வது வட்டி !
வட்டியின் பேறுகாலம்
ஈசலை விட குறைவு...
ஈன்று விழும் குட்டிகளால்
மானம் முறிந்து - உறிந்து
விழும் உயிர்கள் ஏராளம் !

கடவுள் கைவிட்ட
சிலரை - வாங்கிய கடன்
காப்பற்றியதுண்டு !
கடவுளே காப்பாற்ற
நினைக்கும் பலரை
கடன் காவு வாங்கியதுண்டு !
ஈவு இறக்கம் ஏதுமின்றி !

நெற்றியில் குங்கும பொட்டு
வெள்ளை உடை - கணுக்கையில்
மின்னும் தங்கச் சங்கிலி
உயர்தர செருப்பு - தலைக்கு
மேலே கடவுள்களின் கடை...
பலரை சாகடிக்கும் கடன்
சிலரை வாழவைப்பது
கடவுளின் கைங்கர்யமா ?
கை தவறிய காரியமா ?

முடிந்த வரை
கடன் தவிர்ப்போம் !
முடிந்தால் மட்டும்
தவிக்கும் நட்புகளுக்கு
கடன் கொடுப்போம் !
ஏனெனில் சரி-தவறு
மாயைகளுக்கு அப்பாற்பட்ட...
நிபந்தனைகளுக்கு உட்பட்ட
உதவி தானே இது !

எழுதியவர் : வினோதன் (2-Mar-13, 2:24 pm)
பார்வை : 188

மேலே