அபலையின் அழுகுரல்

எங்கோ ஓர் அழுகுரல்
எட்டி பார்கிறேன்....

பார்த்த முகம்
செவ்விதழ் சிரிப்பினிலே அன்னையவள்
முந்தானை சேலைதனில் முகம் புதைத்து
மடிச்சூடில் தலை சாய்த்து
வருவிடும் முடிதனிலே
வாகை சூண்ட
வெற்றிக் களிப்பில்
துயின்று விட

தூக்கம் கலையாமல்
பத்திரமாய்
மலர்படுத்தி

தொட்டு எழுப்பி தூக்கம் கலைந்திடாது
உணவூட்டி உறங்க வைத்த

அந்த அன்னையவள்
சேய் இவள்

சிந்தும் விழிகள்
சோர்ந்து உறங்கிட
சொந்தம் அருகின்றி

உறங்கா விழிகள்
ஏக்கம் ததும்பிட

கடல் தாண்டி

கேட்கிறது இங்கே
இந்த அபலையின் அழுகுரல்....

எழுதியவர் : யாழ் தமி (3-Mar-13, 7:46 pm)
சேர்த்தது : Yal Thami
பார்வை : 119

மேலே