................மனத்திரை............
காத்துக்கிடந்த சமயம்,
நூற்றுக்கும் மேற்பட்ட யோசனைகள் !
நெஞ்சை நெகிழ்த்தியும்,
கண்களை கசியவும் வைத்து !
எல்லாம் நமக்குள் நிகழ்ந்த,
உரையாடல்களின் ஊடுருவல்கள் !
அசைபோடத்துவங்கியதில்,
அறையப்பட்டேன் ஆணியாய் !
நம் காதல் காட்சிகளின் களேபரத்தில்,
நீ வந்து அருகே அமர்ந்ததறியாமல் !!