நன்றியுடன் ....
மனம் உடைந்து போகும் வேளைகளில்
எழுதுகிறேன் உனக்கு
என் படைப்பில்
என் மனதின் ஏக்கங்களை
எனக்கே காட்டுகின்றாய்
படைப்பு, பார்வை , தேர்வு,
விரட்டி ஒதுக்கப்பட்ட
வித்துகளாய் ஒடிந்து போகும்
மனதுக்கு
உரமிட்டு
விழுது கொடுக்கும்
"எழுத்து" உனக்கு
நன்றிகள்
என் அடி மனதிடம் இருந்து ..