திருமணத்துக்கு முன் ....பின் ...?
திருமணத்துக்கு முன் ....
என்னவளின் கால்களிலே ..
இரக்கமற கல் அடித்தால் ..
கலங்குவது அவள் மட்டுமல்ல ..
என் இதயமும் தான் ..
கல்லே உனக்கு இறக்கம் இல்லையா ..?
என்னவள் வருவது தெரியவில்லையா ..?
திருமணத்துக்கு பின் ....
அதே கல் என்னவளில் ..
பட்டபோது ..
ஏனப்பா இத்தனைநாள் ..
வந்து போறியே ,,,
கல்லிருப்பது தெரியவில்லையா ..?
கல்லுக்கு கண்ணில்லை ..
உனக்குமா இல்லை என்கிறார்களே ..
ஏன் இந்த மாற்றம் ,,,,
மனித வாழ்வில் மட்டும் ...?