பெண்மை

அவர்கள் அவர்களாகவே
இருக்கட்டும்
எதற்கு இத்தனை
ஊடுருவல்
ஏன் இத்தனை
சமன்பாடு

வானம் வேறு
பூமி வேறு
ஒப்பீடு இல்லாமலிருப்பது
அத்தனை கஷ்டமா ?
பறவை பறக்கட்டும்
தன்னியல்பாய் சிறக்கட்டும்

பெரு மழையும்
கடும் வெயிலும்
வேறு வேறு அழகியல்
மழையோடு
வெயிலடித்தால்
புது வித வேதியல்....

உயிரணு உருவாவதும்
உள் சென்று கருவாவதும்
உணர்வுள்ள உயிராவதும்
அது எப்பால் என்று முடிவாவதும்
எவன் முடிவிலும் இல்லை
புரியாத கேலி மனிதன்
மிருகத்தின் பிள்ளை...

எண்ணால் கொல்வதும்
எண்ணத்தால் கொள்ளுவதும்
கண்ணால் அள்ளுவதும்
காமத்தால் கிள்ளுவதும்
மனித தன்மையற்ற செயல்
மானமற்ற மனித இயல்

இயற்கையின் விதியில்
இன்னோர் ஊர்வலம்
இன்முகம் காட்டவிடிலும்
புன்முகம் காட்டதே...

யாருக்கு தெரியும்
நாளை உன் வீட்டிலும்
ஒரு பெண் மகன்
பிறக்கலாம்....

எழுதியவர் : கவிஜி (9-Mar-13, 10:35 pm)
பார்வை : 115

மேலே