வினோதினி

ஒருதலையாக
மனம் படிக்க இயலாத
ஒரு அரக்கனின்
செய்கையால்
பொசுங்கியது
நீ மட்டுமல்ல
எங்கள் இதயங்களும்
சேர்த்துத்தான்.

நீ
இன்னும்
இரண்டு நாள்
காத்திருந்தால்..
நாங்கள்
உன்
இறப்புச்செய்தியோடு
காதல் தின
கொண்டாட்டத்தை
நாங்கள்
மறந்திருக்கலாம்...
மறுத்திருக்கலாம்...

உனக்காக
எங்கள் விழியில்
தானாக
உதிரும்
கண்ணீரின் அர்த்தம்
உனக்குத்தெரியும்தானே...
வேறென்ன செய்ய இயலும்
இந்த
பெண்களால்...

இனி
உன்னை
உன் குரலை
எங்கே நாங்கள்
கண்டடைவோம்?

உன்னைப்போல
இன்னும்
சில
வினோதினிகளும்,
அரக்கர்கள்
கூட்டத்தோடு
சிக்கித்தான் இருக்கின்றனர்...

நீ தெய்வமானாய்
என்று
அந்த அரக்கர் கூட்டத்தின்
கூச்சலும் கேட்கிறது...
இல்லை
நீ... எங்களுள்
இருக்கிறாய்
எப்பொழுதும்...

எழுதியவர் : சுகுமார்ஜி (10-Mar-13, 12:31 am)
சேர்த்தது : Sugumarje
பார்வை : 141

மேலே