தேவையில்லை...
மனிதன் மனிதனோடு ஆக்ரோஷமாக
பழகி 'மனிதன்' என்று
கூற தேவையில்லை...
மரங்களை மட்டும் வெட்டி வீழ்த்தி
'வீரன்' என்று
கூற தேவையில்லை....
தூய காற்றை அசுத்தபடுத்தி
'விஞ்ஞானி' என்று
கூற தேவையில்லை....
குழந்தைகளை வெறும் புத்தக புழுவாக
உருவாக்கி 'ஆசான்' என்று
கூற தேவையில்லை.....
உதட்டோரம் மட்டும் சிரிப்பினை
காட்டி 'நலம் ' என்று
கூற தேவையில்லை....