மகளே உனக்காக .....

பெண்ணாய் பிறந்த
பேற்றினால்
உன் அம்மா ஆனேன் .....
உன் அன்புக்கு
முன்னே
அடிமை ஆனேன் ....
உன் அணைப்பால்
சிதைத்தாய்
என் சிந்தனைகளை ....
கோவில் மணி இசைக்கும்
போதெல்லாம்
உன் பள்ளி மணி அடிக்குமா
என் ஓர் ஏக்கம்
பிறக்கும் ....
பள்ளி முடிந்து நீ
வருகையில்
வாரியணைத்து
முத்தமிட
மனம் ஏங்கும் .....
எத்தனை முத்தமிட்டாலும்
போதவில்லை
என் செல்ல
மகளுக்கு ......
முத்தங்கள் கரைந்தாலும்
என் அன்பு மட்டும்
ஆறாய்
பெருக்கின்றதே!.....
உணர்ந்துவிட்டேன்
ஓர் தாயின்
உன்னதத்தை
உன்னால்
என் அன்பு மகளே ....