ஏனிந்தப் பொறாமை?

நீல வானமே!
கோலமயிலோடு
நீயும போட்டியோ!
எத்தனை வண்ணங்கள்!
எத்தனை ஜாலங்கள்!
அப்பப்பா..... ஆயிரம்......
ஆயிரம் கண்களும்
போதாதே!
பாவமந்தச் சின்னமயிலிடம்....
இத்தனை பொறாமையா??
எத்தனைதான் சொலித்தாலும்....
அத்தனையும் பலிக்குமோ
அழகுமயில் ஆட்டத்தில்!