எனது கவிதைப்புத்தகம்
முதல் இதழ்பதிப்பில்
உருவாகியது
எனது கவிதைப்புத்தகம் !
முதல் பார்வை
முன்னுரையானது !
உரையாடல்கள்
உயிரோட்டமுள்ள
பல கவிதைகளுக்கு
எனை தகப்பனாக்கியது !
எங்கள் இணைதலால்
அவள் சுமந்த முதல்கரு
உயிர்க்காதலின்
உன்னத நினைவுகளே !
பக்கங்களின் பிரிவினில்
புத்தகங்கள் கவிப்பேசும் !
அவளது பிரிவினில்..
இன்றும்
முடிவுரை காணாமல்
எனது கவிதைப்புத்தகம்..!
_ மகா