என் காதலிக்கு...

மருத நிலத்தினிலே
மாலை வேளையிலே
மயங்கும் மல்லிகையே!
மன்னவன் நானிருக்க
மனக் கலக்கமும் ஏனோ?
மனக் கதவை திறந்து சொல்லடி,
உன் மன்னவன் நான்தான் என்றடி...!
உன் நுதலின் நடுவினிலே
கவலை ரேகை ஏனடி?
கலங்காதே காதலி,
கைபிடிப்பேன் நானடி...
உன் கன்னங்கள் இரண்டும்
கண்ணீரில் கரைவதேனடி?
கண்ணீரின் கனத்தை
குறைக்க வருவேன் நானடி...
பொழிலிடை பூத்த
பொன் மலரே!
மதுப் பொங்கும்
மலர் இதழே!
வதுவை செய்ய
வருவேன் உன்னை...
எழில் வதனம்
கண்டு திளைப்பேன் திண்ணம்...!