தாமரை மொட்டுக்கள் ! - (மகளிருக்காக)

சிநேகித சொந்தங்களுக்கு வணக்கம்...
எமது பெயரின் கீழே எழுதப் பட்டுவரும் “நட்சத்திரக் கவிதைகள்” எனும் பட்டியல் தரமான கவிதைகளை இனம் காட்டுகிறதா ? வாசித்து எழுதுவோரை வாழ்த்துகிறீர்களா ? “ஆம்” என்றால் ஆனந்தமே!
இது யாம் பதியத் தொடங்கும் புது அத்தியாயம்.... “தாமரை மொட்டுக்கள்”.!!!
தாமரை மொட்டுக்கள் மகுடத்தின் கீழே இந்த தளத்தில் எழுதும் “பெண் பிள்ளைகளின்” தரமான எழுத்துக்களை விலாசமிட பிரியப்படுகிறேன்.
யாம் வாசிக்கும் எழுத்துக்களில் சிறந்தது என்று மனசாட்சி சொல்லும் வரிகளுக்கு முகவரியாய் ###தாமரை மொட்டுக்கள்### இருக்க வேண்டும் என்பது இந்த காவோலையின் பிரார்த்தனை.
------------------------------------------------------------------------
பெண்ணே...நெஞ்சில் உறுதி..உறுதி வேண்டும் - சொ. சாந்தி

தாமரை மொட்டுகளை ஆரம்பிக்க இதோ இந்த அற்புத கவிதையே ரிப்பன் வெட்டட்டுமே! மிக அற்புதம்...மிக மிக ! புலமை மிகு சீரிய வரிகள் அல்லவோ இவை. வாசித்து வாழ்த்துங்கள்..யாருமே பார்க்காமல் கிடக்கிறது இந்த அற்புத படைப்பு !
Added by: C. SHANTHI - கவிதை எண் – 111641
------------------------------------------------------
இழி கருமம் நிறுத்திடுவீர் – ஹேயேந்தினி

அப்பப்பா...என்ன ஒரு அழகு வார்த்தை விளையாட்டில்.இந்த குழந்தையின் தமிழே இனிக்கிறது. ரம்யமான தமிழ் சொல் பாவிப்புக்கள். தமிழின் பெருமை பாடுகிறாள்...தமிழே பெருமைபாட வேண்டுமே இந்த குழந்தைக்கு !
Added by :ஹேயேந்தினி.க - கவிதை எண் – 112271
--------------------------------------------------------------------
குப்பை போடாதீர்கள்.! - சிநேகமுடன் ஸ்நேகா

இந்த சிறுமியின் வரிகள் மிக உயர்வான சமுதாய கல்வி சொல்கிறது. குப்பைப் போடாதீர்கள் என்று புத்தி சொல்லும் அழகே அழகு ! குப்பை போடாதீர்கள் எந்த இடமாக இருந்தாலும்..அது எழுத்தாக இருந்தாலும் கூட !(புரிகிறதா ?)
Added by :snekamudan sneka கவிதை எண் - 112305
-------------------------------------------------------
காதலுக்குச் செவியுண்டெனில் – புலமி அம்பிக்கா

காதல் கவிதைகளாய் நிரம்பி வழியும் கவிதை உலகம் காதல் கவிதைகள் பலதை குழந்தை மரணம் செய்து குப்பையில் போட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி இருந்தாலும் இப்படியான கவிதைகளையும் பெண் குழந்தைகள் எழுதுகிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது !
Added by: pulami ambika - கவிதை எண் – 112344
---------------------------------------
ஒரு இல்லத்தரசியின் டைரி குறிப்பு – தீட்சண்யா

பொதுவாக பெண்குலத்தின் வாழ்க்கை இப்படித் தான் பயணிக்கிறது. சுருக்கமாக, இறுக்கமாக சொல்லி இருக்கிறார் தீட்சண்யா. பெரிதாக எழுதினால் தான் கவிதை என்றில்லையே ? இது அற்புதமான ஒரு படைப்பு.
Added by :Theetchanyaa - 107899
------------------------------------
எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனின் துணையுடன் தாமரை மொட்டுக்கள் தடாகம் நிரப்ப வேண்டும்.////
உங்களுக்கு தெரிந்த பெண் எழுத்தாளிகளின் விபரம் கடிதமாகவோ கருத்துக் குறிப்பாகவோ எழுதுங்கள்!

எழுதியவர் : (19-Mar-13, 8:31 pm)
பார்வை : 305

மேலே