கடைசி சொத்து
![](https://eluthu.com/images/loading.gif)
எதற்காக இத்தனை
இறுமாப்பு
எதற்காக இத்தனை
குரோதம்
எதற்காக இத்தனை
பாவம்
கரையப் போகும்
சுகங்களை எண்ணி
இருக்க போகும்
துணைகளை அல்லாவா
துளைக்கிறாய்
சொத்தனும் தொழுநோய்
உன்
உடலில் ஊறி உருக்குலைக்கிரதே
நினைவில் வைத்துகொள்
நிலை இல்லா நிஜம்
உன் உடலில்
உறையும் வரைதான்
சொத்தெனும் நிர்ப்பீடனம் உனக்கு
உன் நுரையீரல்
விடும் கடைசி சுவாசம்
உன் வாழ்கையின்
கடைசி வாசம்
இவ்வுலகில்
பின்பு நீ
ஆறடியில் உன் உடல் அரங்கேற்றப்படும்
இனி உனக்கு கல்லறைதான் பள்ளியறை
ஆறடிதான்
உன் கடைசி சொத்து
ஆயுள் சான்று
புரிந்து கொள்