நீங்க நல்ல டாக்டர் என்று ...?

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்...

"டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்..."

"அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?"
********************
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.

டாக்டர்: ? ? ? ? ?
********************
"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."

"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"

"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"
நன்றி ; திரட்டியது

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (20-Mar-13, 10:14 pm)
பார்வை : 377

மேலே