புல்லாங்குழல்

அவள் மேனியில்
என் விரல்களின்
நாட்டியம் அரங்கேறியபோதும்..
என் இதழ்கள்
பிரசவித்த மூச்சுக்காற்றே
அவளுடன் இதமாக
உறவாடியது !

இதழ்களின் அரவணைப்பில்
இசையை பிரசவித்தபடி
புல்லாங்குழல்.!



எழுதியவர் : மகா (23-Nov-10, 9:19 pm)
பார்வை : 527

மேலே