தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்கிறது இலங்கைத் தூதரகம்

தமிழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது !

இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் . இதற்காக பல இயக்கங்கள் , கட்சிகள் உழைத்தன . நாமும் இதற்கான பங்களிப்பை செய்துள்ளோம் . பல தலைவர்களை சந்தித்து இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த கையெழுத்துகள் பெற்றுள்ளோம் . மக்களிடத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். அதன் பயனாகவும் , மாணவர்களின் அதிதீவிர போராட்டத்தாலும் இன்று இலங்கை அரசு தனது (உளவு) தூதரகத்தை கேரளாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இது இலங்கை அரசு தானே எடுத்த முடிவல்ல. தமிழகத்தில் இருந்து கிளம்பிய அழுத்தத்தின் காரணமாகவே நடத்துள்ளது இது நடத்துள்ளது .

அடுத்த இலக்கு இலங்கை மீதான பொருளாதார தடை மற்றும் உறவுகளை துண்டிப்பது . இதையும் நாம் தான் நடத்தியாக வேண்டும் . ஒவ்வொரு வெற்றியாக பெற்று தமிழீழத்திற்கு காணிக்கையாக்குவோம் ! தமிழீழம் பெற்றிட வழி காண்போம் .

நன்றி:பெர்னார்ட் செல்வராஜ்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (25-Mar-13, 7:02 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 91

மேலே