வெற்றி வெகுதூரமில்லை...
ஆயுதமும் அரசியலும்
அழித்துவிட்டது உன்னை...
தமிழிழமே... ஆயினும் உனை
ஈன்றடுக்க எம் மாணவர்
தம்நெஞ்சில் சூழ் கொண்டனர்
உண்ணாநோன்பெடுத்து...
உதிரம் உருக்கி...
அகிலம் அதிர...
அறப்போராட்டம் காணும்
எம் தம்பியரின்
வெற்றி வெகுதூரமில்லை...
வாழ்த்துகிறேன்...
தொப்புள்கொடி உறவுகளின்
கண்ணீர் கானல் நீராய் மறைய...
வாழ்த்துகிறேன்....