ஈழம்

கடல் தாண்டி
சென்றேனே தவிர
இவர்கள் பிணம்
தாண்டி செல்லவில்லை ..

நல்ல குணம் கொண்ட
கடவுளா நீ?
என் இனம் தின்ன
காவலா நீ?

துணை கொண்ட தாயவள்
இறந்துண்டு பார்க்கின்றாய்
பாலகன் பசியாற
பாவமாய் இரசிக்கின்ராய்...

கும்பிட்ட கோவிலும்
குருசு இட்ட தேவனும்
குடியளிந்து போனது
ஈழத்தில் பார்த்தீரோ

வடிகின்ற கண்ணீரும்
வற்றாமல் ஓடின
சொரிகின்ற இரத்தமும்
சோர்வகப் போனது

எரிகின்ற தீயினில்
இறங்குவது போல் தோணுது
ஏன் இந்த வாழ்வென
என்னத்தான் தோன்றுது ...!

வி.பிரதீபன்

எழுதியவர் : வி.பிரதீபன் (26-Mar-13, 11:44 pm)
பார்வை : 78

மேலே