பின்தொடர்கிறேன்

நீ விட்டுச் சென்ற
நினைவுகளை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
என்னுள்...
சிலநேரங்களில்
அதனுள் பின்னோக்கி
பயணமாகிறது என் மனது
தாயின் கரம் பற்றி
பின்தொடரும்
ஒரு சிறு குழந்தையைப்போல்
உன் நினைவுகளைப்
பின்தொடர்ந்து...
நீ விட்டுச் சென்ற
நினைவுகளை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
என்னுள்...
சிலநேரங்களில்
அதனுள் பின்னோக்கி
பயணமாகிறது என் மனது
தாயின் கரம் பற்றி
பின்தொடரும்
ஒரு சிறு குழந்தையைப்போல்
உன் நினைவுகளைப்
பின்தொடர்ந்து...