அப்பாவின் சொல்லைக்கேட்டேன் ...!

மகனே அவள் நம் குலத்துக்கு ..
ஒத்துவரமாட்டாள் அவளை மறந்திடடா ...?

முடியாதம்மா என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கமாட்டேன் ....!

அண்ணா என் நண்பிகள் எல்லோரும் ...
கேலிசெய்கிறார்கள் ...தயவு செய்து அவளை
மறந்திடடா ....?

முடியவே முடியாது என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கமாட்டேன் ....!

டேய் நண்பா அம்மாவுக்கு தங்கைக்கு அவளை பிடிக்கவில்லை அவளை மறந்திடடா ...?

முடியவே முடியாது என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கமாட்டேன் ....!

அருமை மகனே உனக்கு என் நண்பனின் மகளை சிறுவயதில் பேசிவைத்துவிட்டேன் அவளை மறந்திவிடு இவளை திருமணம் செய்யடா ...?

அவளைஎன் உயிர் உள்ளவரை மறக்கமுடியாதப்பா ..! ஆனால் இவளை திருமணம் செய்கிறேனப்பா... !

(அப்பாவை தவிர மற்றவங்க எல்லோரும் அவளை மறந்திடடா ...? அவளை மறந்திடடா ...?
சொன்னாங்களே தவிர வேறு கலியாணம் செய்யடா என்று சொல்லவே இல்ல )...அதுதான்
அப்பாவின் சொல்லைக்கேட்டேன் ...நான் எடுத்த முடிவு சரிதானுங்களே...?

ஹி.... ஹி...ஹி....ஹி....ஹி....?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Mar-13, 8:26 pm)
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

மேலே