பட்டமரம் மகிழ்கிறது....!

உடளும் பட்டுவிட்டது ...!
உயிரும் பட்டுவிட்டது...!
பூமிதாயின் துணையுடன் நிமிர்ந்து..
நிற்கிறேன் .அவ்வளவுதான் என் நிலை..
பட்டாலும் என்மீது வண்ணவண்ண...
பறவைகள் இளைப்பாறுவதை...
பார்க்கும் போது துள்ளிக்குதிக்குது மனசு...
மரம் கொத்திப்பறவை என்மீது..
இசையமைப்பது இன்பமாகத்தான் இருக்கிறது ...!
என்மீது பொந்தென்னும் வீட்டைக்கட்டி...
குடித்தனம் நடார்த்தும் சோடிக்கிளிகாலுக்கு..
இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன...
பூமித்தாயே இறுக்கமாக என்னைபிடி...
இளங்குடும்பத்தை பிரித்த பாவம் ..
உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்..
பூக்குள் போகும்வரை மகிழ்வாக இருப்போமே...!