காவிரியின் கண்ணீர்

காவிரியின் கண்ணீர்
@@@@@@@@@@@@@@
கபினியின் கதவடைப்பில்
காவிரி காணாமல் போயிற்று.
யுகபாரதி படிய காவிரியில்
யுத்தகளத்து பதுங்கு குழிகளாய்
மணல்வெளிகள் மல்லுக்கு நிற்கிறது.
செத்துப்போனவர்களின் மனித அஸ்திகள்
தண்ணீரை தேடி அலைந்த களைப்பில்
காவிரி மணல் பரப்பில் சங்கமித்தன.

காலிடறி கீழே வீழ்ந்தபோது
மணல் மூடிய மனித எலும்புகள்
எப்போதோ செத்துப்போன
எனது தமிழனை எண்ண வைத்தது.

பாலத்தில் பயணப்பட்ட வண்டியில்
'அம்மா' பிள்ளைக்கு சொன்னாள்
"நன்றாக பார்த்து கொள் கண்மணி.
இது தான் காவிரி கால் பதித்த தடமாம்"

சன்னல் இடைவெளியில்
கண்களை நுழைத்த சிறுமி,
ஆச்சரியமாக கேட்டு வைத்தாள்
எப்போது அம்மா 'ஆறு' மணலாய் மாறியது?.
' அந்த மாய வித்தைக்காரனை காட்டம்மா'.
இமைக்காது பார்த்த மகளை பார்த்து தாய் சொன்னாள்.
அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு?
காவிரியில் ஓடும் தண்ணீர் உன்
கொள்ளு பேத்தி காலத்திலும் வரலாம் கண்ணே.

எழுதியவர் : முருகன் தில்லைநாயகம் (6-Apr-13, 10:24 am)
சேர்த்தது : அம்பை சுதர்சனன்
பார்வை : 78

மேலே