விடியலை நோக்கி
போட்டிகள் நிறைந்த உலக வாழக்கையில் ,
சாதனை எனபது கடினமானது ,
சாதிக்க வேண்டி விழித்துக்கொண்டிரு ,
இன்றே நீயும் விடியலை நோக்கு !
ஆயிரம் சாதனைகள் உலகில் உண்டு ,
உனக்கு எதிலே நாட்டம் உண்டோ ,
அதற்க்கு தேவையான அறிவை கொண்டு ,
முயற்சிகள் செய் முடித்து காட்ட !
தேவையான அறிவை திரட்டி கொண்டு ,
லட்சியம் அதனை எட்டி பிடிக்க ,
வாய்ப்புகளை தேடி காத்திரு !
அலட்சியம் மறந்து லட்சியம் நோக்கி ,
உனக்கென வாய்ப்புகள் வரும்போது ,
விரைந்து சென்று பற்றிக்கொள்ளு !
உழைப்பை கடினமாக்கு ,
நேர்கொண்டு உழை ,
தன்னம்பிக்கை உயிராய் கொள் ,
முன்வைத்த காலை பின் வைக்காதே !
துணிந்த பின்பு தயக்கம் ஏன் ,
விரைந்து முடித்து விடையை தேடு ,
கிடைக்கும் பதில் ஒவ்வொன்றையும் ,
அனுபவமாய் மனதில் பதிய வை !
சாதனைகளில் சோதனையும் இருக்கும் ,
வேதனைகளை மறந்து வீறு நடை போடு,
உயிர் பிரியும் கடைசி வினாடியும் கூட ,
என்னால் முடியும் என்பதை மறக்காதே !
தோற்றுப்போனவர்களின் வரலாற்றை பார்த்தால் ,
முயற்சிகள் என்பதில் அலட்சியம் இருக்கும் ,
முயற்சிகள் தோற்றிருக்கலாம் ,
முயற்சிக்க முயற்சிக்க தோற்றதில்லை!
விடாமுயற்சி வெற்றியை தரும் ,
முயற்சித்து பார்த்து முன்னேறி வா ,
உன் இலக்குகள் எல்லாம் எளிதில் தொடலாம் ,
விரைந்து வா விடியலை நோக்கி !