பம்பரமும் நானே! சாட்டையும் நானே!
எதையோ தேடி
எங்கேயோ ஓடி...
அதை அடையும் தூரம்
அருகிலேயே இருந்தாலும்
அடையத்தான் முடியவில்லை..
தடுமாறி விழுந்தாலும்
கிடையாக கிடக்கவில்லை
மீண்டும் மீண்டும் ஓடுகிறேன்...
பம்பரமும் நானே! சாட்டையும் நானே!
இதில் இறைவன் என்று
சொல்வது எல்லாம் வீணே!