மழை

தூமைக் குருதியாய்
வழிகிறது
மழை...!

என் நினைவுக்
கழிப்பறையைக்
கழுவியபடி....!

இருந்தும்
அருந்துகிறேன் நான்...!

எங்கெங்கோ என்றென்றோ
பெய்த மழைகளில்
என் வாழ்க்கைத்
தெருவெங்கும் ஓடிய
சாக்கடைகளின் நாற்றம்
இந்த இரவுமழையின்
ஊடே கசிகிறது...!

நான் வேசி
எனில் பாழும் சமூகம்
சுடுகாடு..!

எழுதியவர் : ஹரீஷ்.நெ (11-Apr-13, 6:45 pm)
பார்வை : 133

மேலே