இருட்டில் thedu..
இருள்விரட்டும்
வெளிச்ச தேடலுக்கான
என்பயணம் -
இன்னும் முடிவு பெறவில்லை
கனத்த இதயங்களுக்கு
பட்டுபூச்சியின் கதறல்
காதுகளுக்கு எட்டுவதில்லை -
வருத்தப்பட்டவர்களின் வரிகள்
நிர்வாணத்தை தொலைத்து
தொலைதூரங்களுக்கு அப்பால்
ஒரு புள்ளியாய்....
ஒரு பூஜ்யமாய்...
தொலைந்து போனது.
இல்லாத இடத்தில்தான்
எத்தனையோ காந்த அலைகளும்
எவர் கண்ணுக்கும் புலப்படா
எண்ணிக்கை அடங்கா
ஜீவன்களும் நெளிகின்றன ...
படித்த பாடங்களில்
உள்ளது மட்டும்
சரித்திரமில்லை
அவைக்கு வராமலே
அநேகங்கள்
மூச்சு நிறுத்தப்பட்டு கொல்லப்பட்டன....
நீ நிறைய படிக்க ஆசைப்பட்டால்
விளக்கை நிறுத்தி
இருட்டில் தேடு.
ஆச்சரியங்கள் உன்னை
ஆச்சரியப் படுத்தும் ......
இருள்விரட்டும் வெளிச்சங்கள்
இருட்டிலே ....
ரோஜாக்கள் முளைக்கும்
மண்ணில்தான்
கள்ளிகளும் கவி பாடுகின்றன ....
பீரங்கியின் சத்தமும்
நிற்கப்போவதில்லை
புத்த மடாலய மணியோசையும்
ஒய்வெடுப்பதில்லை!
சுசீந்திரன்