வறட்சி
வறண்ட நிலத்தை
வெறிச்சிட்டுப் பார்த்தாலும்
வெகுண்டு எழுந்து
வெறும் பேச்சுப் பேசினாலும்
ஓசோன் படலம்
ஓட்டை விழுந்தாலும்
ஓய்ந்து போய்
ஒதுங்கி நின்றாலும்
சூரியப் புயலைத் தடுக்கும் வகையறிந்தாலும்
மண் சுமக்கும் மரங்களை
மக்கள் காக்கும் வரை
தோழா !
உன் தோள் சுமக்கும் ஏருக்கு
வேலையில்லை.!