காவேரிக் கரையோரம்
காவேரிக் கரையோரம்
காதோரம் நீ சொன்ன காதல்
நெஞ்செல்லாம் பூவாய் பூத்திருச்சு
விழியோரம் நீ விதைத்த அன்பு
கதிராகி அறுவடைக்கு காத்திருக்கு
அள்ளிக் கதிரை அணைத்து
நெல்லை அரவாக்கும் ஆணழகா
அணைக்காத கதிர் ஒன்னு
ஏங்கித் தவிக்குதே நினைப்பில்லையா
வாய்க்கால் கரையோரத்தில் என்னை
வாரி அணைச்சு முத்த்மிட்டேயிளே
முத்தாரத்திற்கு இதுதான் அச்சாரம்னு
சொல்லிவிட்டுப் போனேயிளே
பக்கமே காணலையே
கண்ணீர் கரையோரம் என்ன
நிக்க வச்சிட மாட்டீயளே
மாமா என் முத்து மாமா
பரிசம் போட்டுப் போயி வருசம் ஒன்னு ஆச்சு
தை போயி சித்திரையும் வந்தாச்சு
கார் விதைக்கும் முன்னே என்ன கைபிடிச்சு
ஊர் அறிய தாலி கட்டுவீகளா
முறுக்கு மீசை வெள்ளைச் சிரிப்பு கறுப்பழகு
மாமா என் முத்து மாமா.
----கவின் சாரலன்