என்ன தேடுறீங்க?
டீவி பார்த்துக்கொண்டிருந்த நாராயணசாமி தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.
நாராயணசாமி மனைவி : என்ன தேடுறீங்க?
நாராயணசாமி : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.
நாராயணசாமி மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?
நாராயணசாமி : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.
நாராயணசாமி மனைவி : என்ன சொல்றான்?
நாராயணசாமி : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.