சித்திரை திருவிழா கதை!!!
வளர்பிறை ஐந்து வந்தால்...
ஊர்கூடிடும் பெருவிழா...
மதுரையில்
சித்திரை மாதத் திருவிழா!
அவதாரங்கள்...
கள்ளழகருக்கு உண்டு...
அம்மன் மீனாட்சிக்கும் உண்டு!
அதில் அழகன் விஷ்ணு...
அம்மை பார்வதி...
முறையில் இவர்கள்..
அண்ணன் தங்கை!!!
அம்மன் குடிகொண்ட
கோவிலின் வடபுறம்..
அண்ணன் அழகர்
வாழ்ந்து வந்த
மலையடிவாரம்!!!
சுந்தர ஈஸ்வரரை
கரம் பற்ற...
அண்ணன் தாரை வார்த்தால்
மட்டுமே திருமணம் என்று..
அழகர் வரவுக்காக..
ஏங்கியது கன்னியது..
மீனாட்சி மனம்!!!
அரசியல்வாதிகளுக்கு இன்று..
வெறும் செல்வாக்கு!
அழகனுக்கு அன்று..
சொல்வாக்கோடு..
செல்வாக்கு!!!
குறைகளை கேட்டால்..
கூப்பிட்ட கரங்களோடு...
ஓடோடி வரும்..
மக்களின் நல்போதகர்...
நம் கள்ளழகர்!!!
அழகன் வரவறிந்து..
ஆற்றில் பெருக்கெடுக்கவில்லை ...
வெள்ளம்!
ஆனால்..
மக்கள் அன்பில் மூழ்கியது..
அவர் உள்ளம்!!!
குறை கேட்டு..
மக்கள் நிறைகண்டு..
உள்ளம் கொண்டது..
சிலிர்ப்பு!
வலுதேகத்தில் உண்டானது...
களைப்பு!
தல்லாகுளத்தில்...
தள்ளாடியபடி...
அன்று பெருமாள் ஆலயத்தில்...
களைப்பாறினார்!!!
அண்ணன் வருகைக்கு
காத்திருந்த அன்னை மீனாட்சி...
வானம் பார்த்த பூமியாய் ..
விழி சோர்ந்து
காத்திருந்தாள்!
அன்பு அழகன்
தாரை வார்க்க வேண்டுமென்ற
வீம்போடு..
நின்றிருந்தாள் !!!
சிக்கல் முளைத்தது....
திருமணம் பாதித்தது...
சிவபெருமானை
இவையனைத்தும்
சோதித்தது!!!
உருவெடுத்தார் திருமால்
அழகாய்...
கள்ளழகராய்!
கோடை மழைக்கு
ஏங்கிய மனதில்...
புயல் வெள்ளமாய்
அண்ணன் திருமணத்தில்
பெருக்கெடுக்க...
தங்கையை தாரை வார்க்க...
சுந்தரேஸ்வரர் பக்கம்
கரை ஒதுங்கினாள்
செல்லப் பைங்கிளி மீனாட்சி!
நான்மாடக்கூடலில்...
மாசி நான்கு வீதிகளில்..
பூப்பல்லக்கிலும் ...
அழகு ரதத்திலும்...
ஊரே வடம் பிடித்து
சேர்ந்திழுக்க..
உலா வந்து..
விழா கண்டனர்...
அம்மையும் அப்பனும்!!!
அண்ணன் தாரை வார்ப்பது
வாடிக்கை...
காத்திருப்பாள் தன் தமக்கை!
இவை இரண்டுமின்றி...
திருமணமில்லை என்பது..
அழகரின் உடையாத நம்பிக்கை!
துயிலெழுந்தார்
கதிரவனுடன் வைகறையில்!
மதுரை கரைக்கு செல்ல...
வான் நட்சத்திரங்கள்
வேடிக்கை காண...
வான வேடிக்கைகளோடு...
மேளதாளங்களுடன்
ஊர் முழுக்க..
பாட்டு முழங்க...
இறங்கினார்
வைகையாற்றங்கரையில்!!!
ஆற்றின் வழி...
செவி வழி...
பெருமாள் சொன்ன
மணச் செய்தி கேட்டு...
மனதில் கடும் வலி!!!
கரை சேரா
கடலலைகள் போல்...
மனம் சேராமல்...
துரோகம் தாங்காமல்..
குரோதம் பொங்கி...
கால்கள் ஊர் தெரியாமல்...
வண்டியூர் நின்றது...
மாது விலையை கண்
கண்டறிந்தது!!!
ஆசை தீர...
கோபம் தணிய...
மங்கையுடன் மஞ்சம்..
பின்னர்
பழையன கழிதலைப்போல்...
தன்னில் தொற்றிய
தீட்டினை துறந்த பின்னே...
அழகர் மலையில் தஞ்சம்!!!!
இது மனம் போல்
சொல்லோடு தோன்றிய...
சொல்லதோன்றிய கதை...
மதுரை மண்ணின்..
சித்திரை திருவிழா கதை!!!