பிறக்குவுயிரெல்லாம் வணங்கும் தாய்!!!

பிறக்குவுயிரெல்லாம் வணங்கும் தாய்!!!

நின்னன்னை வயிற்றில் பெண்ணாக பிறந்“தாய்”
கன்னி பருவத்தோடு அழகாக வளர்ந்”தாய்”
மஞ்சள் கயிறோடு கணவன் வீட்டில் நுழைந்”தாய்”
பூமியில் என்னை பெற்றெடுக்கவே தெய்வமாக வந்”தாய்”


கருவாக சுமக்கயில் என்ன நீ நினைத்”தாய்”
கண்ணே, கனியமுதென்று வாழ்த்தி
வர்ணித்”தாய்”
கண்ணில் கனவோடு என்னை நீயே வளர்த்”தாய்”
காலை யிளங் கதிரொளியாய் பணித்”தாய்”!!!


முத்தமிழை உயிராக நேசித்”தாய்”
அதையே நீ அழகாய் வாசித்”தாய்”
தமிழமுதை என்னில் ஊட்டினாய் இனி”தாய்”
அம்மாவென்ற சொல்லின் அர்த்தம் உணர வைத்”தாய்”!!!


குடும்ப உறவுகளுக்கு நீயே மருந்”தாய்”
கர்வம் கொள்ளா நெஞ்சோடு போதித்”தாய்”
உன்னை பெற்றோரையும் இறுதிவரை
பார்த்”தாய்”
நான் பெற்றதையும் வளர்த்தாய் புதி”தாய்”!!!


பல தவறுகள் செய்தும் மன்னித்”தாய்”
நாளும் நலமுடன் வாழ வரம் தந்”தாய்”
பிறக்குவுயிரெல்லாம் போற்றும் வார்த்தை
சிறந்த”தாய்”
நம்முயிர் போகும்வரை வணங்க வேண்டுமிந்த
தெய்வத்”தாய்”!!!

அன்றலர்ந்த மலராக நாள்தோறும் சிரித்”தாய்”
உயிரோடு நேற்று வரை இருந்”தாய்”
எங்களை நின் நினைவு விட்டு எப்போது
மறந்”தாய்”
அந்த கனமன்றோ அம்மா நீ இறந்”தாய்”!!! இறந்”தாய்”!!! ]இறந்”தாய்”!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (19-Apr-13, 11:29 am)
சேர்த்தது : siva71
பார்வை : 112

மேலே