ரசிப்போம் நாமும்
(Super Moon rises above Sierra Nevada Sequoia
National Park California )
பகலவன் படுக்கச் சென்றான்
சந்திரன் விழித்து வருகிறான் !
பொன்னிற மேனி சூரியனுக்கா
பொன்னிறமே நிலவிற்கா !
காணக் கண் கோடி வேண்டும்
கண் மலரும் நிலவைக் காண !
குளிர் தரும் நிலவோ இங்கு
குளிர்மிகு மலைமீது மலருது !
அரிதான காட்சியன்றோ இது
அறிவியல் சான்றன்றோ இது !
ரசிப்போம் நாமும் ருசிப்போம்
இயற்கை அழகின் சுவையை !
பழனி குமார்