கண்ணீரின் அணைப்பினிலே................!!

காதல் கொண்டு
கனிவாய்ப் பேசி
பலர் கருத்துக் கேட்டுக்
காத்திருந்து
கல்யாண நாளெண்ணி
இன்பன்கொண்டு
இனிமைகள் பல
நாம் கண்டு
இணைந்திருந்து
கழித்துவிட்ட நிமிடங்கள்
எண்ணிப் பார்க்கையில்
இதயத்தில் சிறு
இன்பம் தழுவிக் கொள்கின்றது
எதிர்பார்த்த நாட்கள்
இன்பமாய்க் கழிந்தும்
நாமின்று எண்ணும் வேளைகளில்
பார்த்துக்கொள்ள
முடியாத தொலைவு
எதற்காக அன்பே............?

கனவுகளின் மேவுதலால்
கரு இரவில்
தொலைந்துவிட்ட
தூக்கங்கள்

துன்பத்தின் சூழ்ச்சியினால்
இன்று கடலிடைத் துரும்பாய்
தவித்துவிடும் என்னுள்ளம்

நீ அருகில் இருப்பதாய்
எண்ணிப்பார்க்கையில்
கானல் நீராய்ப் போகுதட
உன்னுருவம்

ஆண்டொன்று போகுமுன்
என்னுயிர்
மாய்ந்துவிடும்
உன்னை எண்ணி எண்ணி
ஊணின்றி
உறக்கமின்றி
உள்ளத்தில் அமைதியின்றி.......

நீ என்னைச் சேரும்வரை
அன்பே நான்
கண்ணீரின் அணைப்பினிலே
காத்திருப்பேன்.............!!

எழுதியவர் : அம்மு (23-Apr-13, 2:58 pm)
பார்வை : 80

மேலே